vijay not celebrating birthday in this year
சமீபத்தில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பொலிசாரால் 13 பேர் பரிதாபமாக சுட்டு கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு ஐநா உள்பட பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சி தலைவர்கள், கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் துப்பாக்கி சூடு சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் குடும்பத்தை சந்தித்து, தற்போது அரசியலில் கால் பதித்துள்ள கோலிவுட் பிரபலங்கள் ரஜினி, கமல், மற்றும் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் அனைவரும் ஆறுதல் கூறி, நிதி உதவியும் செய்தனர்.
இந்த நிலையில் சமீபத்தில் எந்தவித ஆரவாரமும் இல்லாமல், பத்திரிக்கைகளுக்கு கூட தகவல் தெரிவிக்காமல் துப்பாக்கி சூடு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில், ஆறுதல் கூறினார் விஜய். அதுமட்டுமின்றி மரணம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவியும் செய்தார்.
இந்த சம்பவத்தால் தமிழகமே சோகமயமாக உள்ள நிலையில் இந்த வருடம் தனது பிறந்த நாளை கொண்டாட போவதில்லை என்ற முடிவை விஜய் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த மாதம் 22 ஆம் தேதி விஜய் பிறந்த நாளை மிகச்சிறப்பாக கொண்டாட விஜய் ரசிகர்கள் ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கும் நிலையில் விஜய்யின் இந்த முடிவு அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும் அவருடைய இந்த மனிதாபிமான முடிவுக்கு ஆதரவு குவிந்து வருகிறது.
