விஜய்யும், அஜீத்தும் பல விஷயங்களில் எதிரும் புதிருமாக இருப்பதாக ரசிகர்கள் மோதிக்கொண்டாலும் விஜயின் அடுத்த படத்தைப் பற்றி அக்கறையாய் விசாரித்திருக்கிறார் அஜீத். வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ச்சியாக அஜித்தை வைத்து இயக்கிய சிவா, அடுத்து விஜய் படத்தை இயக்க முடிவாகி இருக்கிறதாம்.

’நானும், அவரும் கட்டை விரலும், கடன் பத்திரமும் போல’ என்று கூறி வருகிற பல ஹீரோக்கள், உள்ளுக்குள் அந்த விரலையே கடித்துத் துப்புகிற அளவுக்கு பகமை சேர்ப்பது திரையுலகில் வாடிக்கை. ஆனால், எப்போதாவது நட்பாக இருப்பதைக் காட்டும் விதமாக சில சம்பவங்கள் நடக்கும். 

விஜய்யும், அஜீத்தும் பல விஷயங்களில் எதிரும் புதிருமாக இருப்பதாக ரசிகர்கள் மோதிக்கொண்டாலும் விஜயின் அடுத்த படத்தைப் பற்றி அக்கறையாய் விசாரித்திருக்கிறார் அஜீத். வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ச்சியாக அஜித்தை வைத்து இயக்கிய சிவா, அடுத்து விஜய் படத்தை இயக்க முடிவாகி இருக்கிறதாம்.

சமீபத்தில் சிறுத்தை சிவாவை சந்தித்த அஜீத், “தளபதி படம் எப்போ ஸ்டார்ட் பண்றீங்க?” என்று கேட்டிருக்கிறார். விஜய் நடிப்பில் ஒரு படத்தை இயக்கப் போகிறார் சிவா என்பது அஜீத்திற்கும் தெரியும். அது குறித்து இவரிடம் கூட சிவாவுடன் விவாதித்திருக்கிறாராம். அதற்கப்புறம் முழு கவனமும் ‘விஸ்வாசம்’ படத்திலேயே இருந்தது. 

இப்போது விஸ்வாசம் படத்தின் போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் முடிந்து காப்பி எடுக்க தயாராகி விட்டது. இந்த நேரத்தில்தான் மீண்டும் ’தளபதி படத்தை எப்போ ஸ்டார்ட் பண்றீங்க ?’ எனக் கேட்டிடுக்கிறார் அஜித். அவர் கேட்டதில் வியப்பு ஏதும் இல்லை. ஆனால், அவர் விஜய்யை ‘தளபதி’ என்று சொன்னாரல்லவா? அதுதான் வியப்பு. இதில், ஏதும் உள்குத்து இருக்குமோ? என பொடி வைத்து பேசுகிறது கோடம்பாக்கம்!