விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில்  61வது திரைப்படத்தில் நடித்துவருகிறார். அட்லி மிக சிறந்த இயக்குனர் என்று தன்னுடைய முதல்  இரண்டு படத்திலே நிரூபித்தவர் அது நாம் அறிந்த விஷயம் தான்.

விஜய் தொடர்ந்து இரண்டாவது முறையாக அட்லீ இயக்கத்தில் நடிப்பதை ரசிகர்கள் வரவேற்க  காரணம் விஜய் அட்லி கூட்டணி அந்த அளவுக்கு சிறந்த கூட்டனி என்பது தான். 

இந்த முறை விஜய் ஏன் அட்லிக்கு வாய்ப்பு கொடுத்தார் என்கிற  ரகசியம் தெரியுமா....? இந்த படத்தில் அட்லீ விஜய்க்கு பிடித்த ரோல்லில் அவரை சித்தரித்துள்ளார், மேலும் இந்த படத்தில்  முதல் முறையாக மூன்று கெட்-அப்களில் விஜய் நடிக்கிறார்.

ஏற்கனவே கத்தி திரைப்படத்தில் இரண்டுவிதமான வெவ்வேறு கெட்-அப்களில் விஜய் நடித்து அசத்தியிருந்தார்.

அதே போல் அழகிய தமிழ்மகன் திரைப்படத்தின் ரிசல்ட் நினைவில் இருந்ததால் நடிப்பை மீட்டர் மாறாமல் கொடுத்திருந்த விஜய்க்கு இந்தத் திரைப்படம் மிகப்பெரியதாக சவாலை அமைந்தது என்று கூட சொல்லலாம்.

தற்போது மூன்று கெட்டப்களில் நடிக்க  மிகவும் கடுமையாக உழைத்துவரும் விஜய் மூன்று கேரக்டருக்கும் அதிக வித்தியாசத்தைக் கொடுக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இந்தத் திரைப்படத்தின் சில பகுதிகள் 1980களில் நடைபெறுகிறது. அந்த காட்சிகளில் விஜய் வயதான கேரக்டரில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.  

மேலும் இளமையான மிடுக்கான தோற்றத்தை வெளிப்படுத்தும் விதமாக முறுக்கு  மீசையுடன் இருந்த   தாடியை வைத்திருகிறார் விஜய்.

இதற்கு முன்பு  செயற்கையாக விஜய்க்கு தாடி வைத்தபோதெல்லாம் அது சுத்தமாகப் பொருந்தாமல் போனது. எனவே, இம்முறை செயற்கை தாடி பொருந்தும்மளவிற்கு  தனது தாடியையும் வளர்த்திருக்கிறார் விஜய்.

அடுத்ததாக விஜய் ஏற்றிருக்கும் இளம் வயது கேரக்டருக்காக இப்போது தனது நேரத்தை ஜிம்மில் கழித்துவருகிறார்.

முதன்முறையாக விஜய் மூன்று வேடங்களில் நடிக்கும் இந்த கதையில் ஒரு விஜய் மாறுபட்ட கெட்டப்பில் அவர் நெகடீவ் வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

சமீபகாலமாகவே கட்டுமஸ்தான உடலை அதிக அளவு கேமராவுக்கு காட்சியளிக்கும் விஜய் இம்முறை அதிதீவிரமான பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். மூன்றாவது கேரக்டருக்கான ஷூட்டிங் இன்னும் ஆரம்பிக்கவில்லை என்பதால் அதைப்பற்றியத் தகவல்கள் வெளியாகவில்லை.

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கும் ‘விஜய் 61′ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து நேற்று இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது.

மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு இதுவரை சென்னையிலுள்ள பின்னி மில்லில் பிரமாண்டமாக செட்டில் படமாக்கப்பட்டு வரும் நிலையில், அடுத்தபடியாக வெளிநாடுகளுக்கு விசிட் அடிக்கப்போகிறார்களாம்.

இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், வடிவேலு, சத்யராஜ், கோவை சரளா மற்றும் எஸ்.ஜே.சூர்யா உள்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இந்த படத்தை தயாரித்து வருகிறது.