இளைய தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான பைரவா படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் அடுத்ததாக, அட்லீ இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த படம் குறித்து உறுதியான தகவல்கள் வெளிவந்த போதிலும், இதில் யார் நாயகியாக நடிக்கிறார் என்பது குறித்து சிறு குழப்பம் நீடித்து வந்த நிலையில், இந்த படத்தின் நாயகி யார் என தற்போது உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இதில் துப்பாக்கி, ஜில்லா போன்ற படங்களில் நடித்த காஜல் அகர்வால் தான் நாயகியாக நடிப்பதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.
காஜல் விஜயுடன் நடித்த இரண்டு படங்களுமே மாஸ் ஹிட் கொடுத்துள்ளதால் இந்த படமும், கண்டிப்பாக ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
