vijay next film announced
இயக்குனர் அட்லீ இளைய தளபதி விஜயை வைத்து இயக்கிய முதல் படம் தெறி. இந்தப்படம் விஜயின் திரைப்பயணத்தில் மிகப் பெரிய வெற்றியைக்கண்ட படம்.மீண்டும் அட்லீ மற்றும் விஜயின் கூட்டணியில் கடந்த தீபாவளி அன்று வெளிவந்த படம்தான் மெர்சல். இப்படம் பல சர்ச்சைகளில் சிக்கியது. மேலும் எதிர்மறை விமர்சனங்களுக்கு உள்ளானாலும் தமிழ்த் திரையுலகின் பிளாக் பஸ்டர் படங்களில் ஒன்றாக அமைந்தது.
இதையடுத்து மீண்டும் இந்த வெற்றிக்கூட்டணி இணையவுள்ளது.விஜயின் 62-வது படத்தை முருகதாஸ் இயக்கவுள்ளார். இப்படத்திற்கு பிறகு இளையதளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் நடிப்பார் என்று தெரியவந்துள்ளது.

முருகதாஸ் இயக்கும் விஜயின் 62-வது படத்திற்கே பெயர் வைக்காத நிலையில், அட்லீ இயக்கும் விஜயின் 63-வது படத்திற்கு " ஆளப்போறான் தமிழன்" என்று டைட்டில் வைத்துள்ளார்கள் என்று தகவல் வந்துள்ளது. தகவல் தெரிந்த மறு நொடியிலிருந்து "ஆளப்போகும் தமிழனின் " ரசிகர்கள் பட டைட்டிலை கொண்டாடி வருகிறார்கள்.
