இளையதளபதி விஜய் கடந்த இரண்டு நாட்களாக படப்பிடிப்பு நடைபெறும் இடத்தின் அருகே ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார் என்று நம் தளத்திலேயே கூறி இருந்தோம்.

நேற்று இயக்குனர் ரவிகுமார் உள்பட பல பிரபலங்களும், ரசிகர்களும் விஜய்யுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். இந்நிலையில் இந்த ஆண்டின் சிறந்த குழந்தை நட்சத்திர என்று தேசிய விருது பெற்ற கேரள மாநில குழந்தை நட்சத்திரம் ஆதிஷ் பிரவின் நேற்று விஜய்யை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டார். இதுகுறித்து 'விஜய் மக்கள் இயக்கம்' வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது.

இந்திய அரசு 2017ஆம் ஆண்டிற்கான மலையாள திரைப்படத்தின் சிறந்த குழந்தை நட்சத்திரமாக ஆதிஷ் பிரவின் என்கிற சிறுவனை தேர்வு செய்தது. 

விருது அறிவிக்கப்பட்டவுடன் பத்திரிகையாளர்களை சந்தித்த செல்வன் ஆதிஷ் பிரவின் எனக்கு இந்த விருது கிடைத்ததைவிட இளையதளபதி விஜயை  நேரில் சந்திக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய வாழ்நாள் லட்சியம் என்று கூறி இருந்தார். 

இந்த செய்தி  இளையதளபதி விஜய்  கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டதும். இளையதளபதி விஜய்  உடனே ஆதிஷ் பிரவீனை நேரில் அழைத்து வருமாறு கூறியுள்ளார்.

இதனை அறிந்த ஆதிஷ் பிரவின் உடனடியாக சென்னைக்கு வந்து இளையதளபதி விஜயை  சந்தித்தார். இருவரும் நீண்ட நேரம் மலையாளத்தில் உரையாடிய பின் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.

மேலும் ஆதீஷ்  பிரவின் இன்னும் பல விருதுகளை வென்று வாழ்க்கையில் பல சாதனைகள் புரிய வாழ்த்து தெரிவித்தார் விஜய்.