லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மாஸ்டர்’. விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், கெளரி கிஷன், வி.ஜே.ரம்யா, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்தில் தற்போது விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கி வருகிறார்கள். விரைவில் விஜய் – விஜய் சேதுபதி இருவரின் காட்சிகளைப் படமாக்கவுள்ளனர். 

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். அதற்கான இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் நேற்று  பொங்கல் விருந்தாக மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. பர்ஸ்ட் லுக்கைப் போலவே விஜய் மட்டுமே இருக்கும் இந்த போஸ்டரும் சோசியல் மீடியாவில் வைரலானது. 

கண்ணில் ஸ்டைலாக கூலிங்கிளாஸ் அணிந்திருக்கும் விஜய், வாய் மேல் விரல் வைத்து சத்தமே வரக்கூடாது என்பது போல், மிரட்டும் தொனியில் நிற்கும் செகண்ட் லுக் போஸ்டர் தளபதி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. 

இந்நிலையில்,  #MasterSecondLook என்ற ஹேஷ்டேக், போஸ்டர் வெளியான சிறிது நேரத்திலேயே இந்திய அளவில் ட்ரெண்டானது. அந்த ஹேஷ்டேக் தற்போது இதுவரை 1 மில்லியன் தடவை ட்வீட் செய்யப்பட்டு மாபெரும் சாதனை படைத்துள்ளது. 


இதனால் சூர்யாவின் சூரரை போற்று, தல அஜித்தின் விஸ்வாசம் படங்களின் சாதனை பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனை விஜய் ஃபேன்ஸ் சோசியல் மீடியாவில் தாறுமாறாக கொண்டாடி வருகின்றனர்.