பிகில் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வந்த படத்திற்கு தற்காலிகமாக தளபதி 64 என தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. விஜய் சேதுபதி, மாளவிகா மோகன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், கெளரி கிஷன் உட்பட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகிறது. 

சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள தளபதி 64 படத்திற்கு மாஸ்டர் என பெயர் வைக்கப்பட்டு, அதற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரும் இன்று வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பர்ஸ்ட் லுக் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. 

"மாஸ்டர்" படத்தின் போஸ்டர் வெளியான சில மணி நேரங்களிலேயே  #Master என்ற ஹேஷ்டேக் டுவிட்டர் ட்ரெண்டிங்கில் உலக அளவில் முதலிடம் பிடித்துள்ளது. முதன் முறையாக ப்ளர் ஆன இமேஜில் தலை கைவைத்த படி மாஸ் போஸ் கொடுத்துள்ள விஜய்யின் போஸ்டரை பல லட்சம் ட்வீட்களை செய்து தளபதி ரசிகர்கள் வெறித்தனமாக ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.