பெரும்பாலும் பெரிய நடிகர்களின் படம் என்றால் அதில் மாஸ் பஞ்ச் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. மேலும் இது போன்ற பஞ்ச் டயலாக்குகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறுவதால் அனைத்து படங்களிலும் இதே போன்ற மாஸ் டயலாக்குகள் வைக்கப்படுகிறது. 

இந்த நிலையில் விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான 'துப்பாக்கி' படத்தில் இடம்பெற்ற 'ஐ அம் வெயிட்டிங்' என்ற மாஸ் டயலாக் இன்றளவும் விஜய் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த மாஸ் டயலாக்கை 'சர்கார்' படத்திலும் ஒரு முக்கிய காட்சியில் விஜய் பேசி நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முதலில் ஏற்கனவே பேசிய படத்தின் டயலாக்கை வைக்க மிகவும் யோசித்த இயக்குனர் பின் இந்த படத்தில் இடம் பெரும்  ஒரு காட்சியில் இந்த டயலாக் பொருத்தமாக இருக்கும் என்பதால் பயன்படுத்தியுள்ளாராம். 

ஏற்கனவே சர்க்கார் படத்தின் டிரைலரில்,  'ஐ எம் ஏ கார்ப்பரேட் கிரிமினல்' உள்பட ஒருசில மாஸ் டயலாக்குகள் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நிலையில் இந்த டயலாக் வரும் போது எப்படி இருக்கும்!  விஜய் ரசிகர்கள் இப்போதே இந்த படத்தை ரொம்பா வைட்டிங் என்று தான் கூறவேண்டும்.