இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், கடந்த 2012 ஆண்டு வெளியான 'துப்பாக்கி' திரைப்படம் தற்போது இந்தியில் 'ஹாலிடே' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.  இந்த படத்தில், நடிகர் அக்ஷய் குமார் ஹீரோவாக நடிக்கிறார்.

இந்த படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பிலேயே வெளியான 'கத்தி' படத்தையும் ஹாலிவுட்டில் ரீமேக் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க அக்ஷய்குமார் அணுகியுள்ளதாகவும், ஆனால் இதுவரை அக்ஷய்குமார் தரப்பிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை என கூறப்படுகிறது. இயக்குனர் ஜெகன் சக்தி என்பவர் இந்த படத்தை இயக்க உள்ளதாகவும்,  பிரபல பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.