கடந்த 2017 ஆம் ஆண்டு, தமிழர்களில் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை தடை செய்ய வேண்டும் என 'பீட்டா' என்கிற அமைப்பு வலியுறுத்தி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதித்தது.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டின் மீதான தடையை நீக்க வலியுறுத்து, சிறிய அளவில் மெரினா கடற்கரையில் துவங்கிய போராட்டம், பின் மெரினா புரட்சியாக வெடித்தது. இதற்கு, சில அரசியல் கட்சி பிரபலங்கள் தங்களுடைய வரவேற்பை தெரிவித்தனர். சிலர் போராட்டத்தை கலக்க பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்: குழந்தைக்கு வித்தியாசமான பெயர் வைத்து அசத்திய சினேகா - பிரசன்னா!
 

அதே நேரத்தில் பிரபலங்கள் பலரும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் குதித்தனர், மதுரை, சேலம், என பல்வேறு இடங்களும் ஜல்லிக்கட்டுக்கு குரல் கொடுத்து இளைஞர் போராட்டத்தில் குதித்தனர். அவர்களுக்கு ஆதரவாக, ஜி.வி.பிரகாஷ், ராகவா லாரான்ஸ், ஹிப் ஹாப் ஆதி என பிரபலங்களும் தங்களுடைய ஒத்துழைப்பை கொடுத்தனர்.

அந்த வகையில் தளபதி விஜய்யும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு வலு சேர்க்கும் விதமாக, வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில்... "உலகம் முழுவதும் சட்டத்தை உருவாக்கியது, நம்முடைய கலாச்சாரத்தையும், உரிமையையும் பாதுகாக்க தான். பறிப்பதற்கு அல்ல, தமிழருடைய அடையாளம் ஜல்லிகட்டு, எந்த ஒரு பேதமும் இன்றி ஒன்று கூடி ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு போராடி வரும் அனைவருக்கும் தலைவணங்குகிறேன்.

மேலும் செய்திகள்: இடுப்பு மடிப்பை காட்டியும் ஒர்கவுட் ஆகல! அட்ராசிட்டியை ஆரம்பித்த ரம்யா பாண்டியன்!

இது சம்மந்தமாக கைது செய்யப்பட்டவர்களை வெளியே அனுப்பிட்டா நான் சந்தோஷப்படுவேன். இந்த பிரச்சனைக்கு காரணமான அமைப்பை வீட்டுக்கு அனுப்பிட தமிழ்நாடே சந்தோஷப்படும் என பேசி இருந்தார்.

இந்த வீடியோவை தளபதி விஜய்... ஜனவரி மாதம் 17 ஆம் தேதி 2017 ஆம் ஆண்டு வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ வெளியாகி நான்கு வருடங்கள் ஆகும் நிலையில் தற்போது இந்த வீடியோ...  1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை தளபதியின் ரசிகர்கள் செம்ம ட்ரெண்டாக்கி கொண்டாடி வருகிறார்கள்.