அதேநேரம் தமிழ் சினிமாவில் கமல்ஹாசனை சிறந்த நடிகர் என்றும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை, நடிகர் என்றும் சொல்லலாம்


தளபதி என கொண்டாடப்படும் விஜய்க்கு தமிழகத்தில் மட்டுமின்றி ஆந்திரா, கேரளாவிலும் ரசிகர்கள் உள்ளனர். வசூல் சர்க்கரவர்த்தி என்றும் கொண்டாடப்படுகிறார். இந்நிலையில் விஜய் சிறந்த நடிகர் அல்ல எனக் கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார் சீனியர் நடிகர் ஒருவர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மலையாளத் திரையுலகத்தின் மூத்த நடிகர் சித்திக். இவர் மலையாள தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “மலையாளத் திரையுலகம் நிறையவே அதிர்ஷ்டம் செய்துள்ளது. அதனால்தான் மம்மூட்டி, மோகன்லால் என்ற இரண்டு மறுக்க முடியாத சூப்பர் ஸ்டார் நடிகர்களைக் கொண்டுள்ளது.

மற்றைய திரையுலகத்தில்கூட இப்படியில்லை. தமிழ்த் திரைப்படத் துறையில் வித்தியாசமான நிலைமைதான் உள்ளது. தமிழகத்து மக்கள் நடிகர் விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று போற்றுகிறார்கள். ஆனால், அவர் சிறந்த நடிகர் அல்ல. அவருடைய சூப்பர் ஸ்டார் பட்டமே அவரை உயரத்தில் வைத்திருக்கிறது. அதேநேரம் தமிழ் சினிமாவில் கமல்ஹாசனை சிறந்த நடிகர் என்றும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை, நடிகர் என்றும் சொல்லலாம்’’எனக் கூறியுள்ளார். இது விஜய் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தி இருக்கிறது.