Vijay follows ajith picture again with kathi team
சினிமாவில் ஒரு கூட்டணி வெற்றிகரமாக அமைந்துவிட்டால், அந்த கூட்டணி மீண்டும் இணைவது வழக்கமே.
எம்ஜிஆர், சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடித்த படங்களில் இப்படிப்பட்ட வெற்றிக் கூட்டணிகளை அடுத்தடுத்து பார்க்கலாம்.
அப்படிப்பட்ட வெற்றிக் கூட்டணியை அஜித் - சிவா 'வீரம், வேதாளம், விவேகம்' என தொடர்ந்து கொண்டிருக்கிறது.
விஜய்யும் இப்போது அந்த வெற்றிக் கூட்டணி பார்முலாவைத்தான் தொடர ஆரம்பித்துள்ளார்.
ஆம். 'தெறி' படத்திற்குப் பிறகு 'மெர்சல்' படத்தில் மீண்டும் அட்லீயுடன் இணைந்துள்ளார். அடுத்து 'துப்பாக்கி, கத்தி' படங்களுக்குப் பிறகு மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைய உள்ளார்.
இதுப் பற்றிய தகவல் கடந்த சில வாரங்களாகவே வந்து கொண்டிருக்கிறது. இந்தக் கூட்டணியில் இசையமைப்பாளர் அனிருத்தும் இணையப் போகிறார் என்பதுதான் சமீபத்திய தகவல்.
'கத்தி' கூட்டணியே இருந்தால் நன்றாக இருக்கும் என தயாரிப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் முருகதாஸும் ஓகே சொல்லிவிட்டார்.
முருகதாஸ் தற்போது இயக்கி வரும் 'ஸ்பைடர்' படம் செப்டம்பர் மாதம் வெளிவருகிறது. அந்தப் படத்தின் வேலைகளை முடித்ததும் விஜய் பட வேலைகளை அவர் ஆரம்பிப்பாராம்.
