தென்னகத்தின் மாஸ் ஹீரோ தளபதி விஜய்க்கும், அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் இடையில் ரத்தம் வர்ற மாதிரி உரசல் இருப்பதாக சொல்லப்படுகிறது. ’பிகில்’ பட ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்துவிட்டு, அதில் விஜய் காவி வேஷ்டி கட்டி நடித்திருப்பதை எஸ்ஏசி. ஆவேசமாக சத்தம் போட்டுட்டாராம், இதனால் விஜய்யும் அவரது அப்பா மீது பாய்ந்துவிட்டார்! என்று தளபதிக்கும், அவர் தந்தைக்கும் இடையிலான இந்த உரசல் அரசால் புரசலாக கசிந்துள்ளது. 

இந்த நிலையில் இப்போது எஸ்ஏசியின் ஓப்பன் பேட்டி மூலம் இந்த உரசல் வெளிப்படையாகவே தெரிந்துவிட்டது.  அதாவது, ஜெய் நடித்துக்கொண்டிருக்கும் கேப்மாரி எனும் தலைப்பில் படமெடுத்திருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். இதை தனது கடைசி படமாக அவர் அறிவித்திருக்கிறார். இந்நிலையில் இந்த பட ஷெட்டில் வைத்து  ஒரு பிரபல வார இதழுக்கு அவர் கொடுத்திருக்கும் பேட்டியில் எஸ்.ஏ.சி....ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு டைமுக்கு வந்துடணும்னு என் ஹீரோக்களிடம் எதிர்பார்ப்பேன். என் மகனை வெச்சு படம் பண்றப்பவும் அப்படித்தான் நான். என் மகன், அடுத்தவங்கன்னு பார்க்க மாட்டேன். ஆனாலும் விஜய் அப்பவும், எப்பவும் பங்சுவல்தான் என்று பாராட்டியவர் திடீரென “என் கடைசி படத்தை என் மகனை வெச்சு செஞ்சிருக்கலாமேன்னு சிலர் கேட்கிறாங்க. விஜய்யை வெச்சு படம் பண்றதெல்லாம் பேராசை. அவரு லெவல் வேற, அவரு எங்கேயோ போயிட்டாரு. கால்ஷீட், பட்ஜெட் எல்லாம் பிரச்னையே இல்லை. விஜய் ஹீரோன்னா பணம் கொண்டு வந்து கொட்டுவாங்க. 

ஆனால் வளர்ந்துட்டவங்களை ஹேண்டில் பண்றது பயங்கர கஷ்டம். அது ஒரு பக்கம் இருக்க நம்ம கதைக்கு அவங்கள போட முடியாது. சூப்பர் ஸ்டார்களுக்கு பண்ணும்போது அவங்கள மனசுல வெச்சுட்டு ஸ்கிரிப்ட் எழுதணும். அதெல்லாம் ரொம்ப கஷ்டமான விஷயம்” என்று படபடவென பொரிந்து தள்ளியிருக்கிறார். 

அதாவது தனது கடைசிப் படத்தை மகனை வெச்சு செய்ய ஆசை, ஆனால் அந்த சூப்பர் நடிகர் தனது சின்ன வட்டத்துக்குள் வந்து நடிக்க மாட்டார், தயாரில்ல, அது வாய்ப்புமில்ல, அந்த ஆசை நிராசைதான்! என்பதையே சந்திரசேகர் இப்படி கொட்டி தீர்த்து விட்டார். இதன் மூலம் தனக்கும், மகனுக்கும் உள்ள இடையே உள்ள உரசலை அவர் காட்டிவிட்டார். விஜய்யை இந்த சினிமா உலகில் அறிமுகப்படுத்தியதே  நான் தான், ஆனால் என்னுடைய கடைசி படத்தில் நடிக்க அவர் ரெடியா இல்ல! என்பதையெல்லாம் சிலேடையாக சொல்லிவிட்டார் எஸ்ஏசி! என்று இதை டீப்பாக டிபேட் பண்ணுகிறார்கள் சினிமா விமர்சகர்கள். 

தளபதிக்கு தன் அப்பா மீது அப்படி என்ன தான் கோபம்? அதாவது  தேர்தலுக்கு முன்பாக பிஜேபியை விமர்சித்து பேசிய எஸ்ஏசி, எல்லாரும் காவி வேட்டி கட்டிக்கிட்டு போக வேண்டிதான். என்று பாய்ந்திருந்தார். இந்நிலையில் பிகில் பட ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்துவிட்டு சந்திரசேகரிடம் சிலர் உங்க மகனே காவி கட்டிட்டாரே!? என உசுப்பேத்தி விட, அதற்கு அவர் காவி கட்டினா அவர்ட்ட கேளுங்க என்று மனுஷன் பாய்ஞ்சிட்டாராம். 

இது விஜய்யின் காதுகளுக்குப் போக, ஏற்கனவே பிஜேபிக்கும் தனக்கும் ஆகுறதில்லை, இதுல இவர் வேற இப்படி தேவையில்லாம அரசியல் பேசி பிகில் பிஸ்னஸுக்கு வேட்டு வைக்கிறாரே! இப்படி படங்களுக்கு சிக்கல் வந்தா பெரிய தயாரிப்பாளர்கள் எப்படி தன்னை வெச்சு இன்வெர்ஸ்ட் பண்ணுவாங்க? என்பதே தளபதியின் தலைவலியாம். இதை தன் அம்மாவிடம் சொல்லி குமுறிவிட்டாராம் பிகில் மைக்கேல்.