தென்னிந்தியாவில் அதிக அளவிலான ரசிகர்களை கொண்டிருக்கும் நடிகர்களில் விஜயும் ஒருவர். விஜய்க்காக அவரின் ரசிகர்கள் என்ன வேண்டுமானாலும் செய்ய தயங்க மாட்டார்கள். விஜயின் பெயரால் நற்பணிமன்றங்கள் ஆரம்பித்து அதன் மூலம் பிறருக்கு உதவிகள் செய்வது போன்ற நற்செயல்களை செய்யும் ரசிகர்கள். அவரது படம் ரிலீஸ் ஆகும் சமயங்களில் எல்லாம் பட்டையை கிளப்பி விடுவார்கள். 

சமீபத்தில் நிகழ்ந்த கேரள வெள்ளத்தின் போது கூட நிவாரணப்பொருள்கள் வழங்கும் பணியில் அவரது ரசிகர்கள் முழு ஈடுபாட்டுடன் உதவியது குறிப்பிடத்தக்கது.
 இந்த ரசிகர்களில் ஒரு சிலர் ஒரு குறும்படம் ஒன்றை இயக்கி அதனை இணையத்தில் வெளியிட்டிருக்கின்றனர். இந்த குறும்படம் கூறித்து டிவிட்டரில் பதிவு செய்திருக்கும் ஒரு ரசிகர், ”படத்தின் கிளைமேக்ஸ்ல உடம்பு புல்லரித்தால் நீயும் #தளபதி் ரசிகனே.” என குறிப்பிட்டிருக்கிறார்.

விஜய் ரசிகர்கள் என்று வரும்போது ஒருவருக்கு ஒருவர் எப்படி இணக்கமாக இருக்கின்றனர் என்பதை தான் இந்த குறும்படம் காட்டி இருக்கிறது. யாரோ ஒருவருக்கு அடிபட்டதும் பிறர் இணைந்து உதவுவது இயல்வு ஆனால் முன் பின் தெரியாது வெவ்வேறு மதங்களை சேந்த மூவர் எந்த வகையில் ஒன்று சேர்ந்திருக்கின்றனர் என்பதை தான் இந்த படத்தில் கூறி இருக்கின்றனர். அவர்களை இணைக்கும் அந்த பாலம் தான் விஜய். 

தொழில் முறை கலைஞர்களை கொண்டு இந்த முயற்சியை அவர்கள் செய்யவில்லை என்பதால் சிறு சிறு குறைகள் இந்த குறும்படத்தில் தெரிந்தாலும் விஜய் ரசிகர்கள் அவர் மீது எந்த அளவிற்கு பாசம் வைத்திருக்கிறார்கள், அந்த பாசத்தினால் எந்த அளவிற்கு நற்செயல்களை அவர்கள் புரிந்திருக்கிறார்கள், எவ்வளவு ஒற்றுமையாக அவர் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை உணர வைக்கிறது இந்த குறும்படம்.