அடுத்தடுத்து டீஸர், ட்ரெயிலர்கள் வழியாக ரஜினி, அஜீத் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் ரிவீட் அடித்துக்கொண்டு அலையும் நிலையில், இருவருமே தளபதிக்குப் போட்டியாளர்கள் என்பதால்,  யாரை எதிர்த்து கமெண்ட்ஸ், மீம்ஸ் போடுவது என்று புரியாமல் கலங்கி நிற்கிறார்களாம் விஜய் ரசிகர்கள்.

‘சர்கார்’ பட ரிலீஸுக்கு முன்வரை தல, தளபதி இருவரில் யார் பெரியவர், யாருடைய படம் ஒசத்தி என்கிற லெவலில் இருந்த மோதலில் ‘2.0’வுக்குப் பின்னர் ரஜினியும் இணைந்துகொண்டார். அப்படம் குறித்த கலெக்‌ஷன் செய்திகளை வெளியிட்டபோதெல்லாம் அது சர்காரை விட அதிகம் என்று காட்டுவதிலியே ரஜினி கோஷ்டி ஆர்வம் செலுத்தியது.

இதனால் விஜய் ரசிகர்கள் சமீபகாலமாக ரஜினியையும் தங்கள் தளபதிக்குப் போட்டியாளர் லிஸ்டில் வைத்துள்ளனர். இந்த நிலையில் தங்கள் தளபதி படம் பொங்கலுக்கு டெண்டு கொட்டாய்களில் கூட ஓடாதென்பதால் மனம் வெறுத்து அலையும் விஜய் ரசிகர்கள், அஜித், ரஜினி ரசிகர்கள் மட்டும் அவ்வளவு பிசியா இருக்கப்ப நாமளும் எதாவது செஞ்சாகணுமே’ என்று விட்டத்தை வெறித்துப் பார்த்தபடி வாழ்க்கையே வெறுத்துப்போய் உட்கார்ந்திருக்கிறார்களாம்.