விஜய்:

கோலிவுட் திரையுலகம் மட்டும் இன்றி மலையாளம், தெலுங்கு திரையுல ரசிகர்கள் மனதிலும் அசைக்க முடியாத இடத்தை பிடித்தவர் நடிகர் விஜய். இவரின் ரசிகர்கள் பலம் பற்றி பலருக்கும் தெரியும்.

விஜய் படத்தின் எந்த ஒரு தகவல் வெளியானாலும் ஐந்தே நிமிடத்தில் அதனை வைரலாக்கி பத்து நிமிடத்தில் போஸ்டர் அடித்து ஒட்டு கொண்டாடி மகிழ்வார்கள் ரசிகர்கள். 

ரசிகர்கள்:

விஜயின் ரசிகர்கள் அவரை கொண்டாடுவது மட்டும் இன்றி ரசிகர் மன்றத்தின் சார்பாக பாதிக்கப்பட்டவர்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். 

இந்நிலையில் தற்போது கன்னியாகுமரி விஜய் ரசிகர்கள் (ACTOR VIJAY  ONLINE WELFARE CLUB ) என்ற நற்பணி இயக்கத்தின் கீழ் புயல் ,வெள்ளத்தால்  பாதிக்கப்பட்ட குமரி மீனவ மக்கள் குடும்பத்தினர்களுக்கு ஒரு மாதத்திர்ற்கு தேவையான உணவு பொருட்களை வழங்கி உதவி செய்துள்ளனர். இவர்களின் செயல் பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.