"இப்ப எப்படி நான் எல்லார் மூஞ்சிலையும் முழிக்கிறது".... "கேப்மாரி" பட இயக்குநர் புலம்பல்...!

தமிழ் திரையுலகின் மாஸ் இயக்குநர்களின் ஒருவராக திகழ்ந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர், இவர் இயக்கிய ’சட்டம் ஒரு இருட்டறை’, ’நாளைய தீர்ப்பு’, ’நான் சிவப்பு மனிதன்’ போன்ற படங்கள் சட்டத்தையும், அரசாங்கத்தையும் தைரியமாக கேள்வி கேட்கும் எண்ணத்தை சாமானியர்களிடையே வளர்த்தது. இவர் தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார். கேப்மாரி எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில், ஜெய் நடித்துள்ளார். ஜெய்க்கு ஜோடியாக அதுல்யா, வைபவி என்ற இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர். சத்யன், தேவதர்ஷினி, லிவிங்ஸ்டன், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், சித்தார்த் விபின் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். ஏற்கனவே இந்த படத்தில் கிளுகிளுப்பு காட்சிகளும், டபுள் மீனிங் வசனங்களும் அதிகம் இருந்ததால் தணிக்கை குழு படத்திற்கு ’ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

இந்நிலையில் நேற்று யு-டியூப்பில் வெளியான ’கேப்மாரி’ படத்தின் டிரைலரை இதுவரை 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். அதில் ஒரே நேரத்தில் இரண்டு ஹீரோயின்களுடன் ஜெய் அடிக்கும் லூட்டி இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இரண்டு பொண்டாட்டிக்காரன் அனுபவிக்கும் தொல்லைகள் குறித்து சித்தரிக்கும் விதமாக படம் எடுக்கப்பட்டிருந்தாலும், படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகள் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. இதுதான் என்னோட கடைசி படம் என எஸ்.ஏ.சந்திரசேகர் அறிவித்திருந்ததால், படத்தை காண அனைவரும் ஆர்வமாக இருந்தனர். ஆனால் படத்தில் இடம் பெற்றுள்ள டபுள் மீனிங் டைலாக்குகள் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதுவும் "கல்யாணம் பண்றதுக்கு முன்னாடியே எல்லாத்தையும் முடிச்சிட்டேன்" போன்ற வசனம் எல்லாம் விஜய் ரசிகர்களை செம டென்ஷன் ஆக்கிடுச்சி.

 

படத்தில் ஜெய் கேரக்டருக்கு விஜய் எனப் பெயரிடப்பட்டுள்ளதால் ஓவர் காண்டான அவரது ரசிகர்கள், எஸ்.ஏ.சந்திரசேகரை கடுமையாக விமர்சிச்சியிருக்காங்க. "விஜய் அண்ணா பெயரைக் கொடுக்க வேற யாரும் வேணாம் நீங்க மட்டும் போதும்" என யு-டியூப் கமெண்ட்ஸ்ல ஆத்திரத்தை கொட்டித் தீர்த்துள்ளனர். விஜய் அப்பாகிட்ட இருந்து இப்படி ஒரு படத்தை எதிர்பார்க்கலன்னு சிலர் ஆதங்கப்பட்டிருக்காங்க. இப்படி எல்லாம் நெட்டிசன்கள் பண்ணுவங்கன்னு தெரிஞ்சி தான், எஸ்.ஏ.சி. தயாரா ஒரு டைலாக்கை வச்சிருக்காரு. டிரைலர் முடியும் போது ஜெய், "டாக்டர் கிட்ட ரிசல்ட் என்னவா இருக்குன்னு கேட்பாரு". அதுக்கு அவங்க "வேற என்ன ஏ தான்னு சொல்லுவாங்க". அதை கேட்டு பீல்லாகுற ஜெய், "இதுக்கு அப்புறம் எப்படி நான் எல்லார் மூஞ்சிலையும் முழிக்கிறது" ங்கிற  வசனத்தை வச்சியிருக்காரு.