vijay fans celebrate the oviya words
ஓவியா:
களவாணி படத்தில் கதாநாயகியாக இவர் நடிக்க துவங்கி பல ஆண்டுகள் ஆன போதிலும் தற்போது தான் ஓவியாவிற்கு பல ரசிகர்கள் உருவாகியுள்ளனர். இதற்கு காரணம் இவரை மிகவும் அழகாக அனைவருக்கும் காட்டிய அவருடைய மனசுதான்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழி பொய்த்துப் போகாமல் பலித்துள்ளது ஓவியாவின் வாழ்கையில்.
அந்த 100 நாள் போட்டி:
ஓவியாவை பற்றி ரசிகர்கள் அனைவரும் முழுமையாக தெரிந்து கொள்ள உதவியது ஒரே இடத்தில் வெளியுலகம் பற்றிய எந்த ஒரு தொடர்பும் இல்லாமல், பிரபலங்கள் இணைந்து விளையாடிய பிக் பாஸ் விளையாட்டு தான்.

இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தாலும், பின் ரசிகர்கள் மத்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மிக பெரிய வரவேற்பும் கிடைத்தது.
மேலும் ஓவியாவிற்கு மிக பெரிய ரசிகர் கூட்டமும் கிடைத்தது. பலர் ஓவியா இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறிவிட கூடாது என சுவாமிக்கு அர்ச்சனைகள் முதல், ஆன் லைனின் பிரச்சாரமும் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் வசனத்தை பேசிய ஓவியா:
இந்நிலையில் ஓவியா ஒரு பேட்டியில் 'நம்மை எல்லோருக்கும் பிடித்து விட்டால் வாழ்கை ரொம்ப போர் அடிச்சிடும், அதனால் கொஞ்சம் எதிரிகளும் வேண்டும் என கூறினார்.
.jpg)
கொண்டாடும் விஜய் ரசிகர்கள்:
ஓவியா சொன்ன இதே கருத்தை நடிகர் விஜய் 'மெர்சல்' படத்தில் கூறி இருப்பார், இதுவரை யாருடையை வெறுப்பையும் சம்பாதிக்காத ஓவியா, விஜய் ரசிகர்களுக்கும் ஃபேவரட் ஹீரோயின் என்பதால் அவர்களும் இதனை கொண்டாடி வருகின்றனர்.
