Vijay fans are waiting for Mersal updates

தளபதி, ஏ.ஆர்.ரஹ்மான், அட்லீ கூட்டணியில் ஏராளமான பொருட்செலவில் பிரமாண்டமாக உலகம் முழுவதும் சுமார் 3292 தியேட்டர்களில் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது மெர்சல். விஜய் மூன்று வேடத்தில் அசத்தியுள்ள இந்த படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே கொஞ்சம் நஞ்சம் இல்லை, மிக பெரிய அளவில் காணப்படுகிறது.

இயக்குனர், தயாரிப்பாளர், எடிட்டர் என இப்படத்தைப்பற்றி அடிக்கடி புகைப்படங்கள், சுவாரஷ்ய தகவல்கள் என பலவற்றை ட்விட்டரிலும், பேட்டியிலும் வெளியிட்டு மேலும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது சூப்பர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மெர்சலில் ஒவ்வொரு காட்சியும் மிரட்டுமாம், "நீ பற்ற வைத்த நெருப்பு ஒன்று பற்றி எரிய உன்னைக் கேட்கும். நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்க காத்திருக்கும்" என்ற வசனம் வரும் காட்சி ரசிகர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்துமாம். அதுமட்டுமல்லாமல் இடைவெளி காட்சி அனைத்தையும் விட செம மாஸாக இருக்கும் என்ற தகவல் கசிந்துள்ளது. 

மேலும் மெர்சல் படத்தைப்பற்றிய சுவாரஸ்ய தகவல்களுக்காக ட்விட்டரில் தவம் கிடந்து வருகின்றனர் தளபதி ரசிகர்கள்.