இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில் இந்த படத்தின் ஒருசில காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது நெல்லையில் நடைபெற்று வருகிறது.

நெல்லையில் பந்த் நடைபெறுவதும் போலவும் இந்த பந்த்-ஆல் கடைகள் அடைக்கப்பட்டு வன்முறை ஏற்படுவதும் போலவும் ஆட்டோ ஒன்று தீயில் எரிவதும் போலவும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் இந்த படப்பிடிப்பில் விஜய் கலந்து கொண்டதாக தகவல் இல்லை.

நெல்லையில் உள்ள விஜய் ரசிகர்கள் விஜயை பார்க்க வேண்டும் என ஆவலாக இருந்தனர், அனால் இதில் அவர் கலந்து கொள்ளாதது அவர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.