விஜய் ரசிகர்கள் அவருடைய படம் குறித்து தகவல் வெளிவந்தாலே அதனை வைரலாக்கி, நாக்கு நாட்களுக்கு அதை பற்றியே பேச வைத்து விடுவார்கள். நடிகர் விஜய்யே வெளியே வருகிறார் என்றால் சொல்லவா வேண்டும், அவரை பார்க்க அங்கு குவிந்து விட மாட்டார்களா என்ன?

அந்த சம்பவம் தான் தற்போது பின்னி மில்லில் அரங்கேறி உள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜய், தற்போது நடித்து வரும் 63 ஆவது படத்தின் படப்பிடிப்பு பின்னி  மில்லில் நடைபெற்று வருகிறது. விஜய்யின் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் வெளியே கசிய விஜய் ரசிகர்கள் அங்கு கூடிவிட்டனர். 

எப்போது தன்னுடைய ரசிகர்கள் கூறுவதை காது கொடுத்து கேட்டு, கைகுலுக்கி நண்பா என அன்பாக பேசும் விஜய், தன்னை பார்க்க ரசிகர்கள் குவிந்ததால் கண்டிப்பாக தங்களை பார்த்து விட்டு தான் செல்வார் என்கிற நம்பிக்கையில் தான் பின்னி மில் வாசலில் கூடினார்கள் ரசிகர்கள்.

ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவு செய்வது போலவே, விஜய்யும் காரில் இருந்து இறங்கி வந்து ரசிகர்களை பார்த்து விட்டு பின் படப்பிடிப்பிற்காக உள்ளே சென்றார். இது விஜய் ரசிகர்களை குஷி படுத்தினாலும், அவருடன் ஒரு புகைப்படம் எடுக்க முடியவில்லையே என்பது ரசிகர்களுக்கு வருத்தம்.