விஜய்-க்காக உருவாக்கிய என்னுடைய சங்கமித்ரா படத்தில் விஜய் நடிக்கவில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்தார் இயக்குனர் சுந்தர்.சி

கோலிவுட்டில் மிகப்பெரிய விழா எது என்று கேட்டால் அது மெர்சல் இசை வெளியீட்டு விழா தான்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ விஜய், இயக்குனர் அட்லி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் இணைந்துள்ள மெர்சல் படத்தின் இசை வெளியிடப்பட்டது.

இந்த மெர்சல் படத்தின் இசை வெளியீட்டு விழா தொடர்பாக இயக்குனரும், நடிகருமான சுந்தர் சி கூறியது:

“விஜய்க்காக தயார் செய்த ‘சங்கமித்ரா” படத்தைப் பற்றி அவரிடம் பேசினேன். அப்போது, கதை நல்லாயிருக்கு. இன்னும் கொஞ்சம் கதையை மெருகூட்டினால் நல்லாயிருக்கும் என்று கூறினார். ஆனால், அவருக்காக உருவாக்கிய கதையில் தற்போது வேறு நடிகர்கள் நடிக்கிறார்கள்.

அட்லியை பார்த்து எனக்கு பொறாமையாக இருக்கு. ஏனென்றால், ஏ.அர்.ரஹ்மானுக்காக கிட்டத்தட்ட 22 வருடங்கள் காத்திருந்தேன். ஆனால், வந்து மூன்று படத்திற்குள் அவருடன் இணைந்து பணியாற்றிவிட்டார்.

இதுவரை விஜய் என்னுடைய படத்தில் நடித்தது இல்லை. பல வெற்றிகளின் சொந்தக்காரர் யார் என்று கேட்டால் அது விஜய் தான். இதன் காரணமாக அவருக்காகத் தான் சங்கமித்ராவை உருவாக்கினேன். ஆனால், அதில் அவர் நடிக்கவில்லை என்று அவர் வருத்தத்துடன் கூறினார்.