Asianet News TamilAsianet News Tamil

Liger Movie : அஜித்துக்கு போட்டியாக கிளிம்ப்ஸ் வீடியோ... ஸ்லம்டாக் ஆக மாஸ் காட்டும் விஜய் - டிரெண்டாகும் லிகர்

அஜித் நடித்த வலிமை (valimai) படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் நிலையில், அப்படத்துக்கு போட்டியாக லிகர் (Liger) படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

vijay deverakonda Liger movie glimpse video released
Author
Tamil Nadu, First Published Dec 31, 2021, 12:27 PM IST

தெலுங்கு திரையுலகின் இளம் நாயகர்களில் டாப் ஸ்டாராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான பெல்லி சூப்புலி என்கிற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படத்திலேயே வெற்றி வாகை சூடிய விஜய் தேவரகொண்டா, அடுத்ததாக நடித்த 'அர்ஜுன் ரெட்டி' திரைப்படம் அவருடைய கெரியரில் மைல்கல் படமாக அமைந்தது.

vijay deverakonda Liger movie glimpse video released

இந்த இரண்டு படங்களும் தமிழில் ரீமேக் செய்யப்பட்டன. அதன்படி பெல்லி சூப்புலி படம் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ‘ஓ மணப்பெண்ணே’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பை பெற்றது. அதேபோல் அர்ஜுன் ரெட்டி திரைப்படம் விக்ரம் மகன் துருவ் நடிப்பில் ஆதித்ய வர்மா-வாக ரீமேக் செய்யப்பட்டது.

இதையடுத்து தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் அனைத்து படங்களும் ஹிட்டடிக்க, ரசிகர்களின் ஏகபோக வரவேற்பை பெற்றார். அவரின் படங்கள் தெலுங்கு ரசிகர்களை மட்டுமின்றி, தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.

vijay deverakonda Liger movie glimpse video released

தற்போது லிகர் படத்தில் பாக்ஸராக நடித்து வருகிறார் விஜய் தேவரகொண்டா. இப்படத்தை பூரி ஜெகன்நாத் இயக்குகிறார். பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கரண் ஜோகர், சார்மி கவுர், பூரி ஜெகன்நாத் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். 

நேற்று அஜித் நடித்த வலிமை படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் நிலையில், அப்படத்துக்கு போட்டியாக லிகர் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மும்பையில் உள்ள சேரியில் வசிக்கும் இளைஞன் பாக்ஸராவதை மையமாக வைத்து இப்படத்தின் கதை அமைந்துள்ளது.

vijay deverakonda Liger movie glimpse video released

இப்படத்திற்காக விஜய் தேவரகொண்டா கடினமாக உழைத்துள்ளார் என்பது கிளிம்ப்ஸ் வீடியோவின் மூலம் தெரியவருகிறது. சிக்ஸ் பேக்ஸ் உடற்கட்டுடன் இவர் சண்டை போடும் காட்சிகள் சிலிர்க்க வைக்கின்றன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. லிகர் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதம் 25-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios