தெலுங்குத் திரையுலகின் இளம் சூப்பர் ஸ்டார் விஜய் தேவரகொண்டாவின் வெளிநாட்டுத் தோழியின் பெயர் விர்ஜினி என்று தெரிய வந்துள்ளது. கீத கோவிந்தம் பிளாக் பஸ்டர் வெற்றிப் படம் மூலம் பிரபலமடைந்த விஜய் தேவரகொண்டா நோட்டா படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமாகிறார்.

இந்நிலையில் அவர் வெளிநாட்டைச் சேர்ந்த இளம் பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின. இந்தப் படங்கள் போலியானவை என்றும் மார்ஃபிங் செய்யப்பட்டவை என்றும் திரையுலக வட்டாரங்களில் பேசப்பட்டது.

ஆனால் இந்தப் புகைப்படங்கள் உண்மையானது தான் என தற்போது தெரியவந்துள்ளது. 

தொடர்புடைய பெண்ணே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்தப் பெண்ணின் பெயர் விர்ஜினி என்று தெரிய வந்துள்ளது.

இருவரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்ததாகவும் இரு குடும்பத்தினரின்  சம்மதத்துடனேயே பழகி வருவதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார். 

அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய் தேவரகொண்டாவின் பெற்றோர் மற்றும் விர்ஜினியின் தாயாருடன் இருவரும் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இது குறித்து விஜய் தேவரகொண்டா இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை

2016-ஆம் ஆண்டு வெளியான விஜய் தேவரகொண்டாவின் பெல்லி சூப்புலு படத்தில் விர்ஜினி தோன்றியிருப்பதாகவும் கூறப்படுகிறது.