திரையுலகை பொறுத்தவரை நடிகர் - நடிகைகளுக்கு அதிகம் கை கொடுப்பது அதிர்ஷ்டம் என்று தான் கூற வேண்டும். திரையுலக பின்னணியோடு அறிமுகமாகும் வாரிசு நடிகர்களுக்கே... மக்களின் ஆதரவு கிடைக்காத போது, அவர்கள் திரையுலகை விட்டு பின்வாங்கும் சூழல் உருவாகும். ஆனால் ஒரே படத்தில் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவரும் வாய்ப்பு கிடைத்தவர் தான் நடிகர் விஜய் தேவரக்கொண்டா.

இவர் தெலுங்கில் நடித்த 'அர்ஜுன் ரெட்டி' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெறவே, பல படங்களில் நடிக்க அடுத்தடுத்து கமிட் ஆனார். மேலும் தெலுங்கு திரையுலகை தாண்டி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் இவருக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது.

தமிழில் இவர் நேரடியாக நடித்த 'நோட்டா' திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை என்றாலும், சிறந்த கதை அம்சத்தை கொண்ட படம் என அனைவராலும் பாராட்டப்பட்டது.

மேலும், தெலுங்கிலோ... இவர் 'அர்ஜுன் ரெட்டி' படத்திற்கு பின் நடித்த படங்கள் அடுக்கடுக்காக ஹிட் அடிக்கவே, தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இவரை தொடர்ந்து இவரின் சகோதரரும் தெலுங்கு திரையுலகில் நடிகராக களமிறங்கி கலக்கி வருகிறார்.

மிக குறுகிய நாட்களில் நடிகராக மட்டும் இன்றி,  திரைப்படங்களை தயாரிக்கவும் ஆரம்பித்துள்ளார் விஜய் தேவரக்கொண்டா. 

இது ஒரு புறம் இருக்க, தற்போது விஜய் தன்னுடைய பெற்றோருக்காக ஹைதராபாத்தில் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இந்த வீட்டின் கிரகப்பிரவேசம் கடத்த ஞாயிற்று கிழமை அன்று நடந்து முடிந்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்களும் தற்போது சமூக வலைத்தளத்தை வட்டமிட்டு வருகின்றன. விஜய் தேவரைக்கொண்ட தற்போது வாங்கியுள்ள வீட்டின் மதிப்பு 15 கோடி என கூறப்படுகிறது.

பெற்றோருக்காக விஜய் தேவரக்கொண்டா, அழகிய வீட்டை வாங்கி கொடுத்திருப்பதற்கு ரசிகர்கள் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.