'அர்ஜுன் ரெட்டி' படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்கள் மனதை மட்டும் இன்றி தமிழ் ரசிகர்கள் மனதிலும் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் இடம் பிடித்தவர் பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா.

இவர் தமிழில் 'நோட்டா' படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் முதல் திரைப்படம் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்க விட்டாலும், நல்ல திரைக்கதை கொண்ட படம் என அனைவராலும் பாராட்டபட்டது.

இந்நிலையில், விஜய் தேவரகொண்டா நடிப்பில் 'டியர் காம்ரேட்' என்ற திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகி வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது நான்கு மொழிகளிலும் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையதளங்களில் டிரெண்ட் ஆகியுள்ளது.

சுமார் ஒரு நிமிடம் ஓடும் இந்த டீசரில் 30 வினாடிகள் ஆக்சன் காட்சிகளும் மீதி வினாடிகளில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனாவின் ஹாட் லிப்கிஸ் காட்சியும் உள்ளது. இந்நிலையில்  இந்த டீசர் வெளியான 24 மணிநேரத்தில் 5.5 மில்லியன் பார்வைகளை 200K லைக்குகளையும் பெற்று 4 மொழிகளிலும் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

கீதா கோவிந்தம் படத்தில் மிகவும் பிரபலமான இந்த ஜோடிகள் மீண்டும் இந்த படத்தின் மூலம் இணைத்துள்ளனர். இந்த டீசரை பார்க்கும் போதே இதுவும் ஒரு காதல் படம் என்பது உறுதியாகியுள்ளது. 

வரும் மே மாதம் 31ஆம் தேதி ரிலீஸாகவுள்ள இந்த படத்தை பரத் கம்மா இயக்கி வருகிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் சுஜித் சரங் ஒளிப்பதிவில், ஸ்ரீஜித் சரங் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் விஜய் தேவரகொண்டாவின் அடுத்த வெற்றிப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.