'அர்ஜுன் ரெட்டி' படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இந்த படத்தை தொடர்ந்து, தற்போது  தமிழ், கன்னடம்,  மலையாளம் என மூன்று மொழி இயக்குனர்களும் இவரை  நடிக்க வைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தமிழில் இவர் நடிப்பில் ஏற்கனவே 'நோட்டா' திரைப்படம் வெளியாகி   வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும்,  நல்ல விமர்சனங்களைப் பெற்றது. 

இந்நிலையில் தற்போது 'டியர் காம்ரேட்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 4 மொழிகளில் உருவாகி வருகிறது . இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக 'கீதா கோவிந்தம்' பட நாயகி ராஷ்மிகா  நடிக்கிறார்.  இயக்குனர் பரத்கம்மா இயக்கியுள்ளார்.

இந்த படத்தை மே 31ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.  இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முடிவடைந்துள்ளது. இதனால் போஸ்ட்-ப்ரொடக்ஷன்  பணிகளை தீவிர படுத்தியுள்ளனர் படக்குழுவினர்.