'அர்ஜுன்ரெட்டி' படத்தின் மூலம் ஒட்டு மொத்த திரையுலகை சேர்ந்தவர்களையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் விஜய்தேவாரகொண்டா. இவரின் தம்பி ஆனந்த் தேவாரகொண்டா தற்போது ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.

இவர் நடித்துள்ள 'தொரசானி' திரைப்படம் வரும் ஜூலை 12ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் நடிகர் டாக்டர் ராஜசேகரின் மகள் சிவாத்மிகா கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தின்  டீஸர், டிரைலர், ஆகியவை வெளியாகியுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய்தேவார கோண்டாவின், தம்பியான ஆனந்த் கடந்த ஒரு வருடமாக அண்ணனிடம் பேச வில்லையாம். இதற்கான காரணத்தை படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டா விஜய் தேவாரகொண்டா அனைவர் மத்தியிலும் போட்டுடைத்தார்.

அமெரிக்காவில் நல்ல சம்பளத்தில் பணியாற்றி வந்த ஆனந்த், சினிமா மீது கொண்டா ஆசையால், அங்கிருந்து இந்தியா வர முயற்சி செய்தாராம். ஆனால் விஜய் அதெல்லாம் வேண்டாம் சினிமாவில் ஜெயிப்பது சாதாரண விஷயம் அல்ல என பல முறை அறிவுரைகள் கூறியும், அதனை அவர் கேட்காமல் இந்தியா வந்து சினிமாவில் நடிக்க முயற்சி செய்தாராம்.

இதனால் தன்னுடைய தம்பியிடம் பேசுவதை நிறுத்தி கொண்டாராம் விஜய். ஆனால் தற்போது  தன்னுடைய உதவி இன்றி, மிகவும் கஷ்டப்பட்டு வாய்ப்புகள் தேடி ஒரு நல்ல படத்தில் ஹீரோவாக நடித்திருக்கும், தம்பியை நினைத்தால் நெகிழ்ச்சியாக உள்ளது என்றும் பட ப்ரோமோஷனில் கலந்து கொண்டு விஜய் தேவாரகொண்டா பேசினார்.