தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு கடந்த 2 நாட்களுக்கு முன், ஆகஸ்ட் 9 ஆம் தேதி, தன்னுடைய 45 ஆவது பிறந்தநாளை மிகவும் எளிமையாக வீட்டிலேயே கொண்டாடினார். எனினும் இவருடைய வெறித்தனமான ரசிகர்கள் #HBDMaheshbabu என்கிற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் வைரலாக்கி விட்டனர். இது 40 மில்லியனுக்கும் அதிகமான ட்விட்டுகள் இடம்பெற்று சாதனை படைத்தது.

மேலும் மகேஷ் பாபு அனைத்து பிரபலங்களையும் மிகவும் கவர்ந்தது கிரீன் இந்தியா சேலஞ்சில் பங்கேற்றார். இதன் மூலம் பிரபலம் ஒருவர் மரக்கன்று நட்டு விட்டு, அந்த புகைப்படத்தை வெளியிட்டு மூன்று பிரபலங்களுக்கு இதுபோல் செய்து முடிக்க சவால் விட வேண்டும்.

இந்த கிரீன் இந்தியா சேலஞ்சில் தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு பங்கேற்றுள்ளார் மகேஷ் பாபு.  இதை விடபிறந்தநாளை கொண்டாட சிறந்த வழி கிடையாது. இந்த சவாலை நான் ஜூனியர் என்.டி.ஆர், தளபதி விஜய், மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோருக்கு விடுப்பதாக கூறியுள்ளார்.

இவர் கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான, விஜய்க்கு இந்த சவாலை விட்டதால், இவர் இதனை ஏற்று செய்வாரா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்த நிலையில், சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் சவாலை ஏற்று, அதனை சிறப்பாக செய்து முடித்து, தன்னுடைய வீட்டு கார்டன் ஏரியாவில் மரம் நடும் புகைப்படத்தை தளபதி விஜய் வெளியிட்டுள்ளார்.

மேலும் இது மகேஷ் பாபு அங்கதான், கிரீன் இந்தியா தான் சிறந்த வலிமை, நன்றி எனவும் தெரிவித்துள்ளார். தளபதியின் இந்த செயலுக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. தளபதி விஜய் கோலிவுட் திரையுலகில் இந்த சேலஞ்சை துவங்கி வைத்துள்ளதால், இது தமிழ் திரையுலக பிரபலமாக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.