தீபாவளி ட்ரீட்டாக திரைக்கு வந்த "பிகில்" திரைப்படம், ரசிகர்களின் பிரம்மாண்ட ஆதரவால் பல சாதனைகளை முறியடித்து வருகிறது. அட்லீ - விஜய் கூட்டணியில் வெளியான 3வது படம் "பிகில்". இதில் நயன்தாரா, ஆனந்தராஜ், யோகிபாபு, ஜாக்கி ஷெஃராப் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்த போதும், விஜய்யின் மாஸ் வசூலில் அதிரடி காட்டியுள்ளது. 24வது நாளாக உலகம் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கும் "பிகில்" திரைப்படம் இதுவரை 296.90 கோடி வரை வசூல் செய்து கெத்து காட்டி வருகிறது. இந்தியாவில் மட்டும் "பிகில்" திரைப்படம் 205 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

4வது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் "பிகில்" திரைப்படம், பொங்கல் ட்ரீட்டாக திரைக்கு வந்த அஜித்தின் விஸ்வாசம் பட வசூலை முறியடித்து வெறித்தனம் காட்டியுள்ளது. தமிழ்நாட்டில் "பிகில்" திரைப்படம் இதுவரை 141.05 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித்தின் விஸ்வாசம் படம் 140 கோடி மட்டுமே வசூல் செய்த நிலையில், பிகில் திரைப்படம் அந்த வசூலை தட்டித் தூக்கியுள்ளது. 

தென்னிந்திய மார்க்கெட்டை பொறுத்தவரை 200 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ள "பிகில்" திரைப்படம். கேரளாவில் அதிக வசூல் செய்த முதல் தமிழ் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.0 திரைப்படம் தான் கேரளாவில் இறுதியாக அதிகம் வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.