Vijay Antonys Annadurai is released on this date ...

விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவான ‘அண்ணாதுரை’ திரைப்படம் நவம்பர் 30-ஆம் தேதி ரிலீஸாகிறது.

ராதிகா சரத்குமாரும், விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமாவும் இணைந்து தயாரித்து வரும் படம் ‘அண்ணாதுரை’.

இந்தப் படத்தின் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கிறார்.

இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் ஜி.சீனிவாசன் இயக்கி வருகிறார்.

சமீபத்தில் ‘அண்ணாதுரை’ படத்தை தணிக்கைக்கு அனுப்பினர். படத்தை பார்த்த தணிக்கைக் குழு உறுப்பினர்கள் படத்திற்கு எந்த ‘கட்’டும் கொடுக்காமல் படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

அண்ணாதுரை படத்துக்கு தணிக்கை முடிவடைந்துவிட்டாலும் சான்றிதழ் கைக்கு வர 15 நாட்கள் பிடிக்கும் என்பதால், நவம்பர் 30-ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர்.

நவம்பர் 30-ஆம் தேதி ‘அண்ணாதுரை’யை ரிலீஸ் செய்யப்படும் அதே நாளில் சசிகுமாரின் ‘கொடிவீரன்’, ‘திருட்டுப் பயலே-2’ ஆகிய படங்களும் வெளியாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.