Vijay Antony who owns the Kali title Release of First Look and Action ...

நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் திரில்லர் திரைப்படமான “காளி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இயக்குநர் ரஞ்சித் இயக்கி, நடிகர்கள் கார்த்தி, கலையரசன் நடித்த திரைப்படம் ‘மெட்ராஸ்’. இப்படத்திற்கு முன்னதாக ‘காளி’ என பெயரே சூட்டப்பட்டது. ஆனால், சில காரணங்களுக்காக அந்த பெயரை ‘மெட்ராஸ்’ என மாற்ற வேண்டியிருந்தது.

இதனைடுத்து ‘கபாலி’ திரைப்படத்திற்கும் ‘காளி’ என பெயர் வைப்பது என்றுதான் முதலில் முடிவு செய்யப்பட்டது. பின்னர் அப்பெயரை சூட்ட முடியாமல் போனது.

இந்த தகவலை ரஞ்சித்தே பல நேர்காணல்களில் தெரிவித்து இருக்கிறார்.

தற்போது ‘காளி’ என்ற பெயரில் விஜய் ஆண்டனி திரைப்படம் நடிக்க, இத்திரைப்படத்தை கிருத்திகா உதயநிதி இயக்குகிறார்.

கிருத்திகா இயக்கிய முதல் திரைப்படம் ‘வணக்கம் சென்னை’. சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு காளி திரைப்படத்தை இவர் இயக்குகிறார்.

இப்படத்தை விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பாக அவரது மனைவி ஃபாத்திமா தயாரிக்கிறார் என்பது கொசுறு தகவல்.

விஜய் ஆண்டனி படம் என்றாலே மக்கள் மத்தியல் எப்போதும் வரவேற்பு உண்டு. அதிலும், காளி தலைப்போடு வரும்போது கூடுதல் எதிர்ப்பாப்பு இருக்கும்தானே.