தமிழ் படம் இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. இப்படத்திற்கு ரத்தம் என பெயரிடப்பட்டுள்ளது. 

'சுக்ரன்' என்ற படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. இதையடுத்து வேட்டைக்காரன், வேலாயுதம், காதலில் விழுந்தேன், நினைத்தாலே இனிக்கும் என பல்வேறு சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையடுத்து கடந்த 2012-ம் ஆண்டு வெளியான 'நான்' என்ற படத்தின் மூலம் விஜய் ஆண்டனி தமிழ் திரையுலகில் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். அந்த படம் ஹிட்டானதால் தொடர்ந்து வித்தியசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். குறிப்பாக இவர் நடித்த பிச்சைக்காரன் படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. 

தற்போது இவர் கைவசம் தமிழரசன், அக்னி நட்சத்திரம், கொலை, பிச்சைக்காரன் 2, மழை பிடிக்காத மனிதன் என ஏராளமான படங்கள் உள்ளன. இதில் பிச்சைக்காரன் 2 படம் மூலம் விஜய் ஆண்டனி இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். 

இதுதவிர தமிழ் படம் இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கும் புதிய படத்திலும் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. இப்படத்திற்கு ரத்தம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்க ரம்யா நம்பீசன், மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா ஆகிய 3 ஹீரோயின்கள் ஒப்பந்தமாகி உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.