Vijay Antony Music composer singer acto followed by editor ...

இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என இருந்த விஜய் ஆண்டனி தற்போது ‘அண்ணாதுரை’ படத்தில் எடிட்டராக மாறியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அறிமுக இயக்குநர் சீனிவாசன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் ‘அண்ணாதுரை’.

இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி, ஆசிரியர், குடிகாரன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் விஜய் ஆண்டனி ஒரு எடிட்டராகவும் பணியாற்றியுள்ளார்.

இதுகுறித்து விஜய் ஆண்டனி “எடிட்டிங் குறித்த அறிவு ஏற்கெனவே எனக்குள் இருக்கிறது. ஒரு எடிட்டராகப் பணியாற்றியது சந்தோஷத்தை அளிக்கிறது. எப்படி சில வருடங்களுக்கு முன்பு நடிகனாக தைரியமாகக் களமிறங்கினேனோ, அதேபோல் தான் எடிட்டராகவும் களமிறங்கினேன். படம் நன்றாக வந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி” என்றார்.

விஜய் ஆண்டனியின் ‘அண்ணாதுரை’ படம் நவம்பரில் வெளியாகவுள்ளது என்பது கொசுறு தகவல்.