தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகின 'பிச்சைக்காரன் 2' ரிலீஸ் தேதியை அறிவித்த விஜய் ஆண்டனி!
'பிச்சைக்காரன் 2' திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதாக, ரிலீஸ் தேதியை நடிகர் விஜய் ஆண்டனி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் படத்தை, பிரபல இயக்குனர் சசி இயக்கி இருந்தார். ஒரு இசையமைப்பாளராக இருந்து, நடிகராக அறிமுகமாகி, அடுத்தடுத்து தன்னுடைய வெற்றி படங்களை கொடுத்து வந்த விஜய் ஆண்டனிக்கு 'பிச்சைக்காரன்' திரைப்படம் அவரின் திரையுலக வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படமாக அமைந்தது.
அப்பாவை இழந்த ஒரு மகன் தன்னுடைய தாயின் அரவணைப்பில் வளர, பல்வேறு கஷ்டங்களை கடந்து நல்ல நிலைக்கு வரும் அந்த தாய் தன்னுடைய மகனை வெளிநாட்டில் படிக்க வைப்பதோடு, சமூகத்தில் வசதி வாய்ப்போடு இருக்கும் நிலைக்கு வருகிறார். வெளிநாட்டில் இருந்து வரும் ஹீரோ தன்னுடைய அம்மா உயிரை காப்பாற்றுவதற்காக பிச்சைக்காரனாக மாறும் நிலைக்கு தள்ளப்படுகிறார். பிச்சைக்காரனாக வாழும் போது காதலிலும் விழுகிறார். பின்னர் எப்படி அந்த பெண் பிச்சைக்காரனாக இருக்கும் விஜய் ஆண்டனியை ஏற்றுக்கொள்கிறார். விஜய் ஆண்டனிக்கு எதிராக என்னென்ன சூழ்ச்சிகள் நடக்கிறது என்பதை விறுவிறுப்பான கதைக்காதலத்துட கூறி இருந்தது இந்த படம்.
இப்படம் வெளியாகி சுமார் 8 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலையில், அப்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி, நடித்தது மட்டும் இன்றி தயாரித்தும் உள்ளார் விஜய் ஆண்டனி. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்த போது விஜய் ஆண்டனிக்கு விபத்தில் சிக்க அவரின் மூக்கு மற்றும் தாடை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. ஒருவழியாக அதிலிருந்து மீண்டு நலமடைந்துள்ள விஜய் ஆண்டனி, தற்போது தன்னுடைய படத்தை ரிலீசுக்கு தயார் படுத்தியுள்ளார்.
அந்த வகையில், 'பிச்சைக்காரன் 2' ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வெளியாகும் என தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார்.