பிரபல ஹீரோக்கள் தங்கள் அடுத்த பட இயக்குநர்களை என்ன அளவுகோலை வைத்துத் தீர்மானிக்கிறார்கள் என்கிற குழப்பத்துக்கு இன்னும் கொஞ்சம் வலு சேர்க்கும் விதமாக 5 படங்கள் இயக்கி அதில் 4 சூப்பர் ஃப்ளாப்களைக் கொடுத்த இயக்குநர் விஜய் மில்டனுடன் அடித்த படத்தில் கைகோர்த்திருக்கிறார் விஜய் ஆண்டனி.

விஜய் ஆண்டனி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கொலைகாரன்’ மாபெரும் வெற்றிப் பெற்றுள்ளது. விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பை பெற்றுள்ள இப்படத்தை தொடர்ந்து, போஃப்டா மீடியா ஒர்க்ஸ் மற்று தியா மூவிஸ் நிறுவனங்கள், பிரபல பைனான்சியர் கமல் போராவுடன் இணைந்து ‘இன்ஃபினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில், ஒரு புதிய படத்தை தயாரிக்கிறார்கள்.இப்படத்திலும் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கிறார். 

‘கோலி சோடா’ என்ற ஒரே ஒரு  வெற்றிப் படத்தை கொடுத்த பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான விஜய் மில்டன் இப்படத்தை இயக்குகிறார்.இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் சார்பில் லலிதா தனஞ்செயன், எஸ்.விக்ரம் குமார், பி.பிரதீப் குமார் மற்றும் கமல் போரா ஆகியோர் இந்த படத்தை தயாரிக்கிறார்கள்.இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்கி, கோவா, டையூ, டாமான் போன்ற கடற்பகுதியில் ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளனர். தற்போது நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

30க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் விஜய் மில்டன் சேரனின் தயாரிப்பில் ‘அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். தனது ஆபிஸ் வாசலில் நின்றுகொண்டிருந்த சேரனை அப்படம் நடுத்தெருவுக்குக் கொண்டு வந்தது.அடுத்து சின்ன பட்ஜெட்டில் ‘கோலி சோடா’ என்ற ஹிட் படத்தைக்கொடுத்த மில்டன் விக்ரமை வைத்து ‘பத்து எண்றதுக்குள்ள’ என்ற படுதோல்விப்படம் கொடுத்தார். அடுத்து அவர் இயக்கிய ‘கடுகு’,’கோலி சோடா2’ ஆகியவையும் தோல்விப்படங்களே.