சூப்பர் ஸ்டார் ரஜினி, கமலுக்கு பிறகு இப்போதைய இளைஞர் மத்தியில் மாஸ் ஹீரோக்களாக இடம் பிடித்தவர்கள் இளைய தளபதி விஜய், மற்றும் தல அஜித் தான்.

இவர்களுடைய படங்கள் எப்போது ரிலீஸ் ஆகும் என லட்ச்சக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் அஜித் நடித்து வரும் 57வது படப்பிடிப்பும், அட்லீ இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் 61வது படத்தின் படப்பிடிப்பும், சென்னையில் பின்னி மில்லில் நடைபெற உள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக விரைவில் இவர்கள் இருவரும் ஒரே இடத்தில் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.

இதற்கு முன் படப்பிடிப்பில் இருவரும் சந்தித்துக்கொண்டது வேலாயுதம், மங்காத்தா படங்களின் படப்பிடிப்பின் போது என்பது குறிப்பிடத்தக்கது.