இளையதளபதி விஜய்யின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று 'திருப்பாச்சி'. இயக்குனர் பேரரசுவின் முதல்படமான இந்த படத்தின் கதை அஜித்துக்காக எழுதப்பட்டதாகவும், ஆனால் விஜய்யின் கால்ஷீட் தயாராக இருந்ததால் அவர் இந்த நடித்ததாகவும், இயக்குனர் பேரரசு கூறியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

மேலும் அஜித் தனக்கு இயக்குனராகும் முன்பே நல்ல அறிமுகம் ஆனவர் என்றும், அவர் தன்னை பார்க்கும்போதெல்லாம் எப்ப இயக்குனராக மாறப்போறீங்க; என்று கேட்பார் என்றும்.

அதனால் திருப்பாச்சி கதையை அஜித்தை மனதில் வைத்தே தயார் செய்ததாகவும் பேரரசு கூறியுள்ளார்.

 ஆனால் விஜய்யின் கால்ஷீட் தயாராக இருப்பதாக தயாரிப்பாளர் தரப்பு கூறியதால் அந்த படத்தில் விஜய் நடித்ததாகவும் . விஜய் இந்த படத்தில் கமிட் ஆனதும் முதல் ஆளாக தல அஜித்திடம்தான் இந்த விஷயத்தை கூறியதாகவும், அதை கேட்டு 'ஆல் தி பெஸ்ட்' என்று தல வாழ்த்தியதாகவும் பேரரசு கூறியுள்ளார்.