இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் டீசர் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அதேபோல் தல அஜித் நடித்து வரும் 'தல 57' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டிலும் அதே தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் அஜித், விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி மகேஷ்பாபு ரசிகர்களும் உற்சாகும் வகையில் ஒரு இனிப்பான செய்தி வெளிவந்துள்ளது. 

தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயகக்த்தில் மகேஷ்பாபு நடித்து வரும் 'மகேஷ்பாபு 23' படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் அதே தீபாவளி தினத்தில் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாம்.

மேலும் தற்போது ஐதராபாத் படப்பிடிப்பை முடித்துவிட்ட 'மகேஷ்பாபு 23' படக்குழுவினர் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக அடுத்த மாதம் குஜராத் செல்லவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.