Asianet News TamilAsianet News Tamil

Vijay 66 | பிகில், மாஸ்டரை ஓரங்கட்டிய விஜய் 66 ; சூப்பர் ஆரம்பமே அமர்க்களம் தான் !!

Vijay66 | விஜயின் முந்தைய படங்களான பிகில் ,மாஸ்டர் படங்களை விட அதிக விலைக்கு vijay 66 படத்தின் சேட்டிலைட் உரிமம் விலை போனதாக சொல்லப்படுகிறது.  

vijay 66 satellite license sale up to 70 crore
Author
Chennai, First Published Nov 24, 2021, 2:06 PM IST

கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படம் நல்ல வெற்றியை பெற்று கொடுத்தது. இதை தொடர்ந்து கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்துள்ள நெல்சன் மண்டேலா இயக்கத்தில் 'பீஸ்ட்' படத்தில் விஜய் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக  பூஜா ஹெக்டேவும், மூன்று வில்லன்களில் ஒருவராக செல்வராகவனும் இவர்களுடன் யோகி பாபு உள்ளிட்டோரும் இணைந்து நடித்து வருகின்றனர்.

மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தை சன்பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. நெல்சனின் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிரூத் 'பீஸ்ட்' படத்திற்கும் இசையமைக்கிறார்.  ஜார்ஜியா, சென்னை, டெல்லியென பிரமாண்ட செட்களுடன் உருவாகி வரும் இந்த படம் 75 சதவீத படப்பிடிப்பை முடித்துள்ளது. இதன் ரிலீஸ் தேதி குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இதற்கிடையே விஜய் தனது 66 வது படத்திற்காக தெலுங்கு இயக்குனர் மற்றும் தெலுங்கு தயாரிப்பாளருடன் கைகோர்த்துள்ளார். இந்த புதிய படத்தை இயக்கவுள்ள வம்சி பைடிபல்லி தமிழுக்கு புதிய  இயக்குனர் இல்லை. இவர் ஏற்கனவே கடந்த 2016-ம் ஆண்டு நாகார்சூனா, கார்த்திக் நடிப்பில் வெளியான தோழா படத்தை இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஹிட் அடித்த இந்த படம் முழுக்க முழுக்க எமோஷன் கலந்த கமர்ஷியல் படமாகவே இருந்தது. அதோடு வம்சி இயக்கத்தில் வெளியாகியா பிருந்தாவனம், மகரிஷி உள்ளிட்ட படங்கள் எமோஷன் சார்ந்த கதைக்களத்தையே கொண்டிருந்தன. அதன்படி விஜயின் 66 திரைப்படமும் கமர்ஷியல் படமாக இருக்க கூடும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. 

vijay 66 satellite license sale up to 70 crore

விஜய் 66 குறித்து சமீபத்தில் பேட்டியளித்த இயக்குனர் வம்சி;  இந்த புதிய படம் அரசியல் மற்றும் ஆக்ஷன் படம் கிடையாதென்றும், மனித உறவுகள்  உணர்வுகள் சார்ந்த கதைக்களமே தனது பலம், இது நிச்சயம் விஜய் 66 -ல் இருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் படத்தில் அப்டேட்டுகள் டிசம்பர் மாதம் முதல் வெளிவரும் என கூறியுள்ள வம்சி விஜயின் ரசிகர்களை மனதில் கொண்டே கதை எழுதியுள்ளதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் தளபதி 66 படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்னரே இதன் சேட்டிலைட் உரிமம் விற்றுப்போனதாகவும், விஜயின் முந்தைய படங்களான பிகில் ,மாஸ்டர் படங்களை விட அதிக விலைக்கு vijay 66 படத்தின் சேட்டிலைட் விலை போனதாக சொல்லப்படுகிறது.  பிரபல தொலைக்காட்சி நிறுவனமான ஜீ நெட்வொர்க்ஸ் விஜய் 66 பட சேட்டிலைட் உரிமத்தை ரூ.70 கோடிக்கு வாங்கியுள்ளதாம். விஜயின் பிகில் மற்றும் மாஸ்டர் பட சேட்டிலைட்  ரூ.50 கோடிக்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios