இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் தன்னுடைய 63வது படமான 'பிகில்' படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம், வரும் தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வருவது உறுதியாகி உள்ளது. 

இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் தன்னுடைய 63வது படமான 'பிகில்' படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம், வரும் தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வருவது உறுதியாகி உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இப்படத்தில் நடிகை நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் யோகிபாபு, 'பரியேறும் பெருமாள்' கதிர், 'மேயாதமான்' இந்துஜா, என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்திற்காக இணைந்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு, 80 சதவீதம் முடிவடைந்த நிலையில், தற்போது விஜய் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ள படம் பற்றிய தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியாக துவங்கிவிட்டன.

இப்படி பரவும் சில தகவல்களில் ஒன்று, இந்த படத்தின் 'டைட்டில்'. இதுகுறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது... விஜயின் புதிய படத்திற்கான தலைப்பு இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அவருடைய 'பிகில்' படம் விரைவில் வெளிவர இருக்கிறது. அந்த படத்தின் வெற்றியை கொண்டாட தயாராகுங்கள். இந்த படம் பற்றிய புதிய தகவல்கள் வரிசையாக வெளியிடப்படும் என்று கூறியுள்ளார். இதையடுத்து தற்போது விஜயின் 64 வது படத்தின் டைட்டில் என சில பெயர்கள் அடிபடுவது வந்தந்தி என அவரே முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.