தளபதி விஜய், 'பிகில்' படத்தை தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார் என்பது, நாம் அறிந்தது தான். கடந்த சில தினங்களாகவே இந்த படத்தில் யார் யார் நடிக்க உள்ளனர் என்பது குறித்த தகவல் அடுக்கடுக்காக வெளியான வண்ணம் உள்ளது.

அதன்படி, இந்த படத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி விஜய்க்கு வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படட்து. மேலும் பிரபல இயக்குனர் கே.பாக்யராஜின் மகன் சாந்தனு,  மலையாள பட நடிகர் ஆண்டனி வர்கீஸ், உள்ளிட்ட பலர் இப்படத்தில் இணைத்துள்ளனர். விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடிக்கிறார்.

இந்நிலையில் இன்று விஜய்யின் 64 ஆவது படத்தின் பூஜை மிக பிரமாண்டமாக போடப்பட்டு, படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது. இந்த படத்தை, XB பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் பூஜையில், நடிகர் விஜய், விஜய் சேதுபதி, அனிரூத், சாந்தனு, ஸ்டண்ட் சில்வா, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகை மாளவிகா மோகன், தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இதுகுறித்த புகைப்படம் தற்போது, வெளியாகி உள்ளது. ஏற்கனவே பிகில் படத்திற்காக வெறித்தனமாக காத்திருக்கும் விஜய் ரசிகர்களுக்கு, அந்த படம் வெளியாவதற்குள் '64 படம்' துவங்கப்பட்டுள்ளது செம்ம குஷியாக்கி உள்ளது.