இன்னும் பெயரிடப்படாத, விஜயின் 63 மூன்றாவது படம், பரபரப்பாக சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது. அதே போல் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவு செய்யும் விதத்தால், ஒவ்வொரு நாளும், ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி, விஜய் ரசிகர்களை குஷி படுத்தி வருகிறது. ரசிகர்களும் சைலண்டாக புகைப்படங்களை வைரலாக்கி வருகிறார்கள்.

இந்த படம் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், விஜய்யின் அடுத்த படம் குறித்த தகவலும், அதனை இயக்க உள்ள இயக்குனர்கள் பெயரும் வெளியாகி கொண்டிருக்கிறது.

ஏற்கனவே விஜய்யின் அடுத்த படத்தை, இயக்குனர் மோகன் ராஜா இயக்குவார் என கூறப்படும் நிலையில், இந்த லிஸ்டில் புதிதாக இணைந்துள்ளார், மாநகரம் படத்தை இயக்கி, ஒரே படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகை திரும்பி பார்க்க வைத்த, பிரபல இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

தற்போது, இவர் நடிகர் கார்த்தி நடித்து வரும் 'கைதி' என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படமும் மிகவும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வருகிறது. இவர், விஜய்யை பார்த்து ஒரு கதை கூறியுள்ளதாகவும், அது அவருக்கு பிடித்து போனதால், விஜய் இவருடைய இயக்கத்தில் தன்னுடைய 64 வது படத்தை நடிக்க ஓகே சொல்லி உள்ளார் என ஒரு தகவல் பரவி வருகிறது. 

ஏற்கனவே விஜய் 64 படம் குறித்து, பல தகவல்கள் அடுக்கடுக்காக வெளியாகி வரும் நிலையில், இப்போது வெளியாகியுள்ள இந்த தகவல் உண்மையாகுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.