இயக்குநர் அட்லி இயக்கத்தில், தளபதி விஜய் மூன்றாவது முறையாக கைகோர்த்துள்ள 'விஜய் 63 ' திரைப்படம். குறித்து நாளுக்கு நாள் பல தகவல்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

தற்போது இந்த படம் குறித்த, புகைப்படம் ஒன்றை வெளியிட்டு... இயக்குனர் அட்லீ பாதுகாத்து வந்த சஸ்பென்ஸை லீக் செய்துள்ளார் யோகி பாபு.

இந்த படத்தில் தளபதி விஜய், கால் பந்து விளையாட்டு கோச்சாக நடிக்கிறார் என்பதும், அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருவதும் நாம் அறிந்தது தான்.

அதே போல் முக்கிய கதாப்பாத்திரத்தில், காமெடி நடிகர் யோகிபாபு, கதிர், ஆனந்த் ராஜ்,  போன்ற பல முக்கிய நடிகர்களும் நடித்து வருகிறார்கள்.

ஆனால் யார் யார்? என்ன ரோலில் நடிக்கிறார்கள் என்பதை அட்லீ இது வரை வெளியிடாமல் ரகசியம் காத்து வந்தார். தற்போது இதனை தகர்க்கும் விதத்தில், யோகி பாபு வெளியிட்டுள்ள புகைப்படத்தால் பதில் கிடைத்துள்ளது.

சர்க்கார் படத்தில் காமெடி நடிகராக வந்த யோகி பாபு 'விஜய் 63 ' படத்தில், கால் பந்து விளையாட்டு வீரராக வருகிறார். நடிகர் கதிரும் இதோ போல் கால் பந்து வீரராக நடிக்கிறார் என்பது, இந்த புகைப்படத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

 

தற்போது,  இந்த புகைப்படம் வெளியாகி விஜய் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை எகிற செய்துள்ளது. மேலும் இந்த புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.