தளபதி 63 படம் குறித்து, பல அல்டிமேட் தகவல்கள் அவ்வப்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில்,  அட்லீ இயக்கத்தில், விஜய் நடித்து வரும் படத்தில் விஜயின் பெயர் 'பிகில்' என வைக்கப்பட்டுள்ளதாக நெருங்கிய வட்டாரத்தில் இருந்து கிசுகிசுக்கப்படுகிறது.

அதாவது இந்த படத்தில் விஜய் அப்பா மகன் என இரண்டு கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். அப்பா விஜய் பற்றிய தகவல்கள் அதிகம் வெளியாகாத நிலையில், மகனாக நடித்து வரும் விஜக்கு 'மைக்கேல் ' என பெயர் வைத்துள்ளதாக ஒரு தகவல் வெளியானது.

ஆனால் இதனை படக்குழுவை சேர்ந்த சிலர் மறுத்தனர். இந்நிலையில் தற்போது மகனாக நடித்து வரும் விஜயின் பெயர் பிகில் என்றும், இதுவே படத்தின் தலைப்பாக இருக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே விஜய் - அட்லீ கூட்டணியில் வெளியான படங்களுக்கு, 'தெறி', 'மெர்சல்' என வித்தியாசமான மாஸ் பெயர்களையே சூட்டியுள்ள அட்லீ, இந்த பெயரை படத்திற்கு வைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறி விஜய் ரசிகர்கள். மேலும் #bigil என்கிற ஹாஷ்டாக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

மேலும் விஜய் காரில் இருந்து இறங்கும் புதிய புகைப்படம் ஒன்றும் வெளியாகி, விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. 

இந்த படத்தில், பரியேறும் பெருமாள் படத்தில் ஹீரோவாக நடித்த கதிர், சிந்துஜா, யோகிபாபு, ரோபோ ஷங்கர், உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.