நடிகர்களும், இயக்குனர்களும், தங்கள் படங்களின் கதை மற்றும் கதாபாத்திரங்கள் வெளியாகாமல் இருக்க எச்சரிக்கையாக இருப்பது உண்டு. படப்பிடிப்பில் துணை நடிகர், நடிகையும் தொழில்நுட்ப கலைஞர்களையும் செல்போன் பயன்படுத்த அனுமதிப்பது இல்லை.

தனியார் பாதுகாவலர்களையும் நிறுத்தி வைப்பார்கள். ஆனால் அதையும் மீறி, சில படங்களின் கதைகள் வெளியே கசிந்து விடுகிறது. 

அந்த வகையில்  இப்போது, அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரது 63ஆவது படத்தின் கதையும் வெளியாகிவிட்டதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

"அதாவது கால்பந்து விளையாட்டு வீரராக இருக்கும் விஜய் கதிர் இருவரும் நெருங்கிய நண்பர்கள், உள்ளூர் போட்டிகளில் விளையாடி பரிசுகள் பெறுகின்றனர். பிறகு கால்பந்து பயிற்சியாளராக மாறுகிறார்கள். ஒரு கட்டத்தில் கதிர் மர்மமாக சாகடிக்கப்படுகிறார். இந்த கொலையை விசாரிப்பதில் போலீசார் மெத்தனம் காட்டுகின்றனர்.  இதனால் விஜய் கொலைகளை கண்டுபிடிக்க களமிறங்குகிறார். அப்போது கொலைக்குப் பின்னால் பயங்கர சதி திட்டங்கள் இருப்பது தெரிகிறது. வில்லன்களுடன் மோதி அழிக்கிறார். பின் கதிர் பயிற்சி அளித்த கால்பந்து அணிக்கு பயிற்சியாளராக மாறி எப்படி சாம்பியன் கோப்பையை வெல்ல வைக்கிறார் என்பது கதை என்று சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. 

ஏற்கனவே விஜயின் கில்லி படமும் விளையாட்டை மையமாக வைத்து வெளிவந்தது அதைவிட, இப்படம் விறுவிறுப்பான காட்சிகளுடன்  தயாராவதாக கூறப்படுகிறது.