விஜய் தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில் 63 ஆவது படத்தில் நடித்து வருகிறார். சென்னையை பூந்தமல்லியில் தற்போது கால் பந்து மைதானத்தின் பிரமாண்ட செட் அமைத்து, பட காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

விஜய் தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில் 63 ஆவது படத்தில் நடித்து வருகிறார். சென்னையை பூந்தமல்லியில் தற்போது கால் பந்து மைதானத்தின் பிரமாண்ட செட் அமைத்து, பட காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேலும் அடிக்கடி, ஷூட்டிங்கின் போது... எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சியாக்கி வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில், விஜய் வீல் சேரில் அமர்ந்துள்ளது போன்ற ஒரு புகைப்படம் வெளியாகியது. அதை தொடர்ந்து தற்போது, கால் பந்து அணியின் கேப்டனாக நடித்து வரும் நடிகை சிந்துஜா , ஷூட்டிங் ஸ்பாட்டில் கால் பந்து விளையாட்டு செட்டில் சிவப்பு நிற உடையில் எடுத்து கொண்டுள்ள புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்த படத்திற்காக சிந்துஜா தன்னுடைய முடியையும் வெட்டி கொண்டு நடித்துள்ளார் என்பது இந்த புகைப்படம் மூலம் தெரிகிறது.