அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றி உள்ள பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இந்த படத்தின் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த நிலையில் இந்த படத்தில் நயன்தாராவின் அப்பா கேரக்டரில் நடித்து வரும் பிரபலம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

பேராசிரியரும் குணசித்திர நடிகருமான கு.ஞானசம்பந்தம் கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்டபோது இதனை அனைவர் முன்னிலையும் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது காட்டு தீ போல் பரவி வருகிறது.

மேலும் இந்த படத்தில் சமீபத்தி தான் பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப், இணைத்தார். மேலும் யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'தளபதி 63' படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். விஷ்ணு ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.