Asianet News TamilAsianet News Tamil

விஜய் 63 படத்தில் ஷாருகான் நடிப்பது உறுதியா? படக்குழு வெளியிட்ட அதிரடி தகவல்!

அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'தளபதி 63' படத்தில் பிரபல, பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சிறப்பு வேடத்தில் நடிக்க உள்ளதாக நேற்று தகவல் வைரலாக பரவியது. தற்போது இது உண்மையா? அல்லது வதந்தியா? என படக்குழுவினர் விளக்கம் கொடுத்துள்ளனர்.
 

vijay 63 movie join sharukhan? updated news
Author
Chennai, First Published Mar 28, 2019, 5:08 PM IST

அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'தளபதி 63' படத்தில் பிரபல, பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சிறப்பு வேடத்தில் நடிக்க உள்ளதாக நேற்று தகவல் வைரலாக பரவியது. தற்போது இது உண்மையா? அல்லது வதந்தியா? என படக்குழுவினர் விளக்கம் கொடுத்துள்ளனர்.

vijay 63 movie join sharukhan? updated news

அதாவது, 'தளபதி 63; படத்தில்  ஷாருக்கான் போலீஸ் கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும், இவர் நடிப்பதால் இந்த படம் அகில இந்திய அளவில் கவனத்தை பெற்றுள்ளதாகவும் ஒரு தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.

ஆனால் இது குறித்து, படக்குழுவினரிடம் இருந்து எந்த அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் இதுகுறித்து படக்குழுவினர் விளக்கம் கொடுத்துள்ளனர்.

vijay 63 movie join sharukhan? updated news

இதுகுறித்து அவர்கள் கூறுகையில்  இந்த செய்தியில் உண்மையில்லை. அப்படியொரு எண்ணமும் தங்களுக்கு இல்லை'  தளபதி 63' படத்தில் ஷாருக்கான் நடிப்பதாக பரவிய வதந்தி என இந்த தகவலுக்கு முற்று புள்ளி வைத்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios